ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியே எரிபொருள் விலை உயர்விற்கான காரணமாகும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினை திருப்திபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலேயே எரிபொருளுக்கான விலைகள் அண்மையில் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கான விலை ஏற்றமும் இந்த தீர்மானத்திற்கு ஏதுவாக அமைந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளுக்கான வரிகளை குறைத்தால் எரிபொருள் விலையை அதிகரித்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது என குறிப்பிட்டுள்ள அவர் அமைச்சரவை மாற்றப்பட்டதேயொழிய முக்கிய அதிகாரங்களை வகிக்கும் அதிகாரிகளில் மாற்றம் செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் இருந்த பேய் பூதங்கள் இன்னும் மத்திய வங்கியை ஆட்டுவிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள ரவி கருணாநாயக்க எரிபொருள் விலையை அதிகரிக்காது வரியை குறைத்திருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார். குற்றம் சுமத்தியுள்ளார். எரிபொருள் விலையை அதிகரிக்காது வரியை குறைத்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.