Home சினிமாமோகன்லாலை தொடர்ந்து சூர்யாவுடன் இணைகிறார் தெலுங்கு நடிகர் சிரிஷ்

மோகன்லாலை தொடர்ந்து சூர்யாவுடன் இணைகிறார் தெலுங்கு நடிகர் சிரிஷ்

by admin



தமிழ் நடிகர் சூர்யாவின் 37ஆவது படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலை தொடர்ந்து தெலுங்கு நடிகர் சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.  தற்போது செல்வராகவன் இயக்கத்தில்  `என்.ஜி.கே.’ படத்தில்  சூர்யா  நடித்து வருகின்றார். இப்படத்தின் பின்னர் சூர்யா கே.வி.ஆனந்த்துடன் இணைகின்றார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது பிரபல தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.  லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை புரிகிறார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More