நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் அஜின்கியா ரஹானேவுக்கு 12 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
இந்தப் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகப் பந்துவீச ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினர் அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டமைக்காகவே அணியின் தலைவர் ரஹானேவுக்கு அவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக்காட்டிலும் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டமையானது ஐபிஎல் போட்டி விதிமுறைகளை மீறிய செயல் என்றபடியினால் அணியின் தலைவர் ரஹானேவுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்படுகிறது என ஐபிஎல் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது