தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்..
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான கோவைகளை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அழித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் பேணப்பட்டு வந்த, விடுதலைப் புலிகள் தொடர்பான 200 கோவைகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலிகளுடனான யுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் நிலவிய தொடர்புகள் குறித்த சகல ஆவணங்களும் இத்துடன் அழிவடைந்திருக்கும் என குறிப்பிடப்படுகிறது.
1978ம் ஆண்டு முதல் மூன்று தசாப்த காலமாக நீடித்து வந்த யுத்தம் குறித்த தகவல்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் எப்போது, எங்கு, எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை வெளிவிவகார அமைச்சு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1958ம் ஆண்டு பொது ஆவணங்கள் சட்டத்தின் அடிப்படையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு பிரித்தானிய அரசாங்கத்திற்கு உண்டு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிர்வாக தேவைகளுக்கான ஆவணங்களே இவ்வாறு அழிக்கப்பட்டதாகவும், பிரித்தானியாவின் கொள்கை அடிப்படையிலான ஆவணங்கள் அழிக்கப்படாது பேண வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்..