144
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாளைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.ஊடகவியலாளர்களினால் நாளைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுப்படவுள்ளது .
யாழில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது நேற்று அதிகாலை 10 பேர் கொண்ட இனம்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தி இருந்து அதில் குறித்த செய்தியாளர் படுகாயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love