குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுப்படுத்தும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டாம் என கூட்டு எதிர்க்கட்சி அனைத்து தேர்தல்களிலும் கூறிய 16 பேர் அணிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னரே இந்த ஞான உதயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுப்படுத்துவதே அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேரின் நோக்கம். அதனை நிறைவேற்றவே அவர்கள் முயற்சித்து வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மகிந்த ராஜபக்சவே முடிவு செய்வார்.
தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கூடிய தகுதியானவர்கள் வேட்பாளர்கள். மகிந்த ராஜபக்ச ஒரு உணர்வுபூர்வமான தலைவர் அவர் தகுதியானவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.