குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி செயலகத்தினால் 10 மி்ல்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு விமானப்படையினரால் புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம் பாடசாலை விளையாட்டு மைதானம் இன்று(18) ஜனாதிபதியால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்ரோபர் 14 ஆம் திகதி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன கிளிநொச்சி அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக வருகை தந்த போது கனகபுரம் பாசடாலை சமூகத்தினரால் பாடசாலை விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தருமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு நேரடியாக விமானப்படையினரிடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு அவர்களால் புனரமைப்புச் செய்யப்பட்டது.
சுற்று மதில் அமைத்தல், மைதானத்திற்கு புல் பதித்தல் உள்ளிடட பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று மாணவர்களின் பயன்பாட்டுக்கு ஜனாதிபதியினால் கையளிக்ப்பட்டுள்ளது.
1969 ஆரம்பிக்கப்பட்ட கனகபுரம் பாடசாலையில் இன்று வரை நிரந்தரமான மைதானம் இன்றி காணப்பட்ட பிரச்சினைக்கு அதிபர் திருமதி இரவீந்திரனின் முயற்சியினால் அழகான முறையில் மைதானம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளமை மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.