தென்கொரியாவில் இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதமென அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென் கொரியாவில் நாய்களின் இறைச்சியை மக்கள் விரும்பி உண்பதனால் ஆண்டுதோறும் இறைச்சிக்காக 10 லட்சம் நாய்கள் கொல்லப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு விலங்குகள் கெயார் என்னும் சமூகநல நல அமைப்பு நாய் பண்ணையாளர் ஒருவர் மீது வழக்கு தொடர்ந்ததுடன் இறைச்சிக்காக நாய்கள் கொல்வதனை தடை விதிக்க வேண்டும் எனவும் Nhரிக்கை விடுத்திருந்தது. வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதம் என தெரிவித்துள்ள நீதிமன்றம் குறித்த பண்ணை உரிமையாளரும் குற்றவாளி என தீர்ப்பு அளித்ததுடன் அவருக் அபராதமும் விதித்த்துள்ளது.
இதனை வரவேற்றுள்ள கெயார் நிறுவனம் தென்கொரியா முழுவதும் இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.