குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அகில இலங்கை ரீதியாக அஞ்சல் அலுவலக பணியாளர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்ட அஞ்சல் பணியாளர்கள் இன்று(25) திங்கட்கிழமை பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்ட அஞ்சல் அலுவலகத்திற்கு முன் காலை 10 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-குறித்த போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள அணைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் கடமையாற்றுகின்ற நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
– அகில இலங்கை ரீதியாக அஞ்சல் அலுவலக பணியாளர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க போராட்டும் 14 நாட்களை கடந்துள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலக பணியாளர்களும் தொடர்ந்தும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது