துருக்கியில் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 192 ராணுவ அதிகாரிகளை கைது செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அந்நாட்டு ஜனாதிபதி ரையிப் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதிப்புபுரட்சியில் ஈடுபட்;டமைக்காகவே இவ்வாறு அவர்களை கைது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சதிப்புரட்சி மெக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்ட நிலையில் மேலும் இந்த சதிப்புரட்சி முயற்சியுடன் தொடர்புடைய 50, 000 பேர் கைது செய்யப்பட்டதுடன், 150,000 பேரின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. இராணுவ உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இவ்வாறு தண்டிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 192 ராணுவ அதிகாரிகளை கைது செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் ராணுவ பிரிகேடியர் ஜெனரல் ஒருவர், 30 போர் விமான விமானிகள் உள்பட விமானப்படையை சேர்ந்த 99 அதிகாரிகள் மற்றும் தரைப்படையை சேர்ந்த 99 ராணுவ அதிகாரிகள் என மொத்தம் 192 ராணுவ அதிகாரிகள் கைது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள், மத குரு பெதுல்லா குலனுடன் ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக தொலைபேசியில் உரையாடிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது