188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் மாணவிக்கு நீதி கோரியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காலை யாழ் நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் பிரதான தபால் நிலையத்தின் முன்பாக இன்று காலை 9 மணி முதல் 10 மணிவரை இக் கவணயீர்ப்பு நடைபெற்றது. இப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மதகுருமார்கள் உட்பட பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love