காணாமல் போன சிறுவர்களைக் கண்டறிவதற்காக புதிய மொபைல் அப்ளிகேஷனை இந்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று அறிமுகம் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரீயுனைட் என்ற பெயரில் இந்த மொபைல் அப்ளிகேஷன் சேவையை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
காணாமல் போன குழந்தைகளையும் அவர்களது பெற்றோரையும் சேர்த்து வைப்பதற்கான முயற்சி இது எனவும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமூகத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள இந்த மொபைல் அப்ளிகேஷன் அருமையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன குழந்தைகளின் புகைப்படம் , பிறந்த திகதி, காவல்நிலையத்தில் நிலையத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டு விபரங்கள் , குழந்தைகளின் அங்க அடையாளங்கள் போன்ற விவரங்களை இந்த மொபைல் அப்பில் பெற்றோர் பதிவு செய்யலாம்.
இந்த சேவையை அமேசன் நிறுவனத்தின் உதவியுடன் வழங்குவதாகவும் அன்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் வகை கைத்தொலைபேசிகளில் இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யலாம் எனவும் அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.