212
அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கடுமையான குடியேற்ற கொள்கைகளை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க எல்லையில் பிரிக்கப்பட்ட குடியேறிகளின் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களரிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் சட்டத்தினை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ள போதிலும் தொடர்ந்தும் சுமார் 2,000 குழந்தைகள் பெற்றோர்களைப் பிரித்தே வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love