184
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று லண்டனில் இன்று ஆரம்பமாகின்றது. எதிர்வரும் 15-ம் திகதிவரை நடைபெறும் இந்தத் தொடரின் முதல் நாளான இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் டுசான் லஜோவிக்குடன் போட்டியிடவுள்ளார்.
மகளிர் பிரிவில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, அமெரிக்காவின் லெப்சென்கோவுடன் போட்டியிடவுள்ளார்.
Spread the love