சினிமா

பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்கும் வரலட்சுமி


சிம்புவுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார் அதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை படத்திலும் கதாநாயகியா நடித்தார். இதன் பின்னர் நான்கு வருட இடைவெளியில் மாணிக்யா என்ற கன்னடப் படத்திலும் நடித்தார். பின்னர் கதாநாயகியாக மட்டுமின்றி, முக்கிய வேடங்களிலும் நடிக்கத் தொடங்கிய வரலட்சுமி. விக்ரம் வேதா, நிபுணன், சத்யா ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

துற்போது விஷாலின் சண்டக்கோழி 2, கவுதம் கார்த்திக்கின் மிஸ்டர் சந்திரமௌலி , ஜெய்யின் நீயா 2 விஜய்யின் சர்கார், உள்ளிட்ட படங்கள் தற்போது வரலட்சுமி கைவசம் உள்ளன. இ

இந்நிலையில், ஜேகே இயக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் வரலட்சுமி. இந்தப் படத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் அவர் நடிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டு;ளளது. சாய் சமரத் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.