சினிமா

நிவின் பாலியுடன் இணைந்த பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி

நிவின் பாலி நடிக்கும் ‘காயம்குளம் கொச்சூன்னி’ படத்தில் பிரபல வசனகர்த்தாவும், பாடலாசிரியருமான மதன் கார்க்கி இணைந்துள்ளார். நிவின் பாலியுடன் பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், சன்னி வேன், பாபு ஆண்டனி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.

தற்போது இப்படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதி வருகிறார் மதன் கார்க்கி. 1800 ஆம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தை சுற்றி அமைந்துள்ளது.

நேரடி மற்றும் புத்தம் புதிய திரைப் பிரதிக்கு ஏற்ப வசனம் எழுதுவதே ஒரு கடினமான பணியாக இருக்கும்போது, அதுவும் பின்னணிக் குரல் (டப்பிங்) பதிப்புகளுக்கு வசனம் எழுதுவது எப்படி இருக்கும்? இந்த வகையில், மதன் கார்க்கி பாகுபலி படங்களுக்கும், சமீபத்திய வெற்றிப் படமான ‘நடிகையர் திலகம்’ படத்துக்கும் வசனம் எழுதியது ஒரு மகத்தான, தனித்துவமான சாதனை.

இதன் மூலம், மதன் கார்க்கி மற்ற பிராந்திய மொழிகளில் உருவாகும் சரித்திர படங்களுக்கு, அதன் சாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு ‘நுழைவாயில்’ ஆனார் மதன் கார்க்கி என புகழப்படுகிறார்.

இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘மலைக்கள்ளன்’ என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.