அரசியல் சார்ந்த படம் ஒன்றை எடுக்கவிருந்த நிலையில், மகன் சிம்புவுக்காக அதை கைவிட்டு காதல் கதை சார்ந்த புதிய படம் ஒன்றை இயக்குகிறார் நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்தர். தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என பன்முகம்சார் பணிகளை ஆற்றி சாதனை படைத்தவர் நடிகர் டி.ராஜேந்தர். தனது அடுத்த படமான ’இன்றையக் காதல்டா’ படத்தின் விபரத்தை நேற்று வெளியிட்டுள்ளார்.
அரசியல் நகைச்சுவை தொடர்பான திரைப்படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் முழு நீள காதல் படத்தை இயக்குவது ஏன்? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர்.
இன்றையக் காதல்டா படத்தில் டி.ராஜேந்தருக்கு வில்லியாக வேடத்தில் நமீதா நடிக்கிறார். அவருக்கு கணவராக நடிக்க ஒரு கதாநாயகனை அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.