சென்னையின் அயனாவரம் பகுதியில 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட 17 பேரையும் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மாற்றுத்திறனாளி சிறுமி அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பலரால் கடந்த ஏழு மாத காலமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தற்போது இந்தவிடம் தெரிய வந்துள்ள நிலையில் பெற்றோர் காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் 24 பேர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்கள்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று சென்னை மகளிர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்ட்டது. குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்ற வளாகத்திலிருந்து சந்தேக நபர்கள் 17 பேரையும்காவல்துறையினர் அழைத்துச் செல்லும்போது, ஆத்திரமடைந்த பல வழக்கறிஞர்கள் அவர்களை கடுமையாக தாக்கியதனால் நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளை குறித்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேருக்கு ஆதரவாக யாரும் முன்னிலையாக மாட்டார்கள் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது