சிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள்; போட்டியில் 67 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான் தொடரையும் கைப்பற்றியுள்ளது. சிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது.
அந்த வகையில் முதல் இரு போட்டிகளிலும் வென்ற பாகிஸ்தான் அணி இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே 25.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 67 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 9.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 69 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியுள்ளது.