பிரவீன் செல்வா….
தனியார் துறையில் மருத்துவம் செய்பவர்களின் பெரும்பாலான மருத்துவ செலவுகள் வாழ்வின் இறுதிகால கட்டத்தில் தான் ஏற்படும். வாழ்வின் இறுதி பன்னிரண்டு மாதங்களில் மருத்துவசெலவின் அதிகளவு வீதத்தை செலவுசெய்ய வேண்டி வரும்.
எந்த முக்கிய சிகிச்சையினை தொடங்கமுதலும், வைத்தியர் முக்கியமான மூன்று விடையத்தினை நேயாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
1. இது நேயாளியின் உடலுக்கு பொருத்தமானதா?
2. இதற்கு எவ்வளவு செலவாகும்?
3. இந்தநேரத்தில் இதை செய்தால் பலன் கிடைக்குமா?
இவை தெரிவிக்கப்படாமல் பல சிகிச்சைகள் தனியார் வைத்திய சாலைகளில் தொடங்கப்படுவதால் பலர் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். உதாரணத்திற்கு சர்க்கரை வியாதிமூலம் வரும் சிறுநீரக செயலிழப்பினை கூறலாம். மாற்று சிறுநீரகம் சிகிச்சை மேற்கொண்ட பலருக்கு அதனை பராமரிக்க மாதம் நிறைய பணம் செலவாகும் என்று தெரிவதில்லை, அல்லது சத்திரசிகிச்சை செய்யும் வைத்தியர்கள் சரியாக சொல்வதில்லை. சிறுநீரகம் மாற்றியவுடன் நோய் குணமாகிவிடும் என நம்பி கடன் பட்டு சிகிச்சை மேற்கொள்வர். பின்னர் மாதப்பராமரிப்பிற்க்கு பணம் தேவைபடும் போது பெரும் கடனாளிகளாக இருப்பர்.
இது புற்றுநேயாளிகள், ஈரல் செயலிழந்தவர்கள், மூளையில் குருதி பெருக்கு ஏற்பட்டவர்கள் போன்றவர்களுக்கும் பொருந்தும். தனியார் துறையில் சிகிச்சைகளை ஆரம்பிக்க முதல் , சிகிச்சைக்கான அண்ணளவாக ஏற்படும் செலவினை வைத்தியரிடம் தெளிவாக கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் இவற்றிக்கான சிகிச்சையின் போது சிலவேளைகளில் எதிபாராதவிதமாக அதிதீவிர சிகிச்சைபிரிவில் தங்க நேரிடலாம். இதனால் செலவுகள் அதிகரிக்கலாம். எந்த மருத்துவ சிகிச்சையின் போதும் மூன்று முக்கிய விடையங்களை நேயாளிகள் பரிசீலித்தே முடிவுக்கு வர வேண்டும். அவையாவன,
1. சிச்சையின் மூலம் கிடைக்கும் பலன்
2. சிச்சைமுறையில் இருக்கும் ஆபத்து
3. சிகிச்சைக்கான செலவு
நோயாளி எடுக்கும் சொந்த முடிவினை வைத்தியர் வரவேற்கவேண்டும். . அதைவிடுத்து மிரட்டி தேவையற்ற சிகிச்சைக்கு வற்புறுத்தல் கூடாது…!!!