லண்டன் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் ஏறிய நிலையில் உடுவே தம்மாலேக தேரர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டுள்ளார் . வெளிநாடு செல்வது தொடர்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பில் வழங்கப்பட்ட திகதி பற்றிய சர்ச்சை காரணமாகவே அவர் இவ்வாறு விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.
வெளிநாடு செல்ல தேரருக்கு அனுமதி இல்லை என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் விமானத்தில ஏற அனுமதிக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட திகதி பற்றிய சர்ச்சை இருப்பதாக தெரிவித்து அவர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார். லண்டனில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு தம்மாலேக தேரர் லண்டன் செல்லவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது