158
மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை அண்மித்த பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பூங்கா அமைக்கப்பட்டதன் பின்னர் அப்பிரதேசத்தில் பசுமைப் பூங்கா அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் அப்பிரதேசத்தின் பாதுகாப்பு சம்பந்தமான தரவுகளைப் பெற்று அதனைப் பேணவுள்ளதாகவும் அவ்வதிகார சபை தெரிவித்துள்ளது.
Spread the love