அமெரிக்காவின் அலஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் விமானியைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடல் மட்டத்தில் இருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள டேனலி தேசிய பூங்காவினை சுற்றிப் பார்க்கச் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகளவான பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் போலந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை விமானியை பற்றிய தகவல் கிடைக்காத நிலையில் அவரும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகின்றது
விபத்து நிகழ்ந்த பகுதியில் வெப்பநிலை மைனஸ் 17 டிகிரிக்கும் கீழ் உள்ளதனால் மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.