2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை டெல்லி உச்சநீதிமன்றம் எதிர்வரும் வருகிற 14-ம் திகதிவரை ஒத்திவைத்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக தெரிவித்து குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.
இதனையடுத்து; இந்த தீர்ப்பை எதிர்த்து , அமுலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றல் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. நேற்றையதினம் இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில் நீதிபதி விடுப்பில் இருந்ததால், வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது