மாலியில் பிரான்ஸ் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியகியுள்ளது. பிரான்ஸ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த மாலி சுதந்திரம் பெற்ற பின்னர் உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்ற நிலையில் மாலிக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 4 ஆயிரம் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு உள்ளனர்.
இந்நிலையில் காட்டு;பபகுதியொன்றிலிருந்து தீவிரவாதிகள் பிரான்ஸ் ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தநிலையில், பிரான்ஸ் ராணுவம் அப்பகுதியில் நேற்று வான்தாக்குதல் மேற்கொண்டுள்ளது.இந்த வான் தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பினைச் சேர்ந்த முக்கிய தலைவரான முகமது அக் அல்மௌனர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் ஒரு பெண் மற்றும் ஒரு இளைஞர் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் பொதுமக்களின் உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் பிரான்ஸ் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது