Home இலங்கை சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில் காவற்துறைச் சேவை முன்னெடுக்கப்படும்….

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில் காவற்துறைச் சேவை முன்னெடுக்கப்படும்….

by admin


சட்டவாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் காவற்துறைச் சேவையை முன்னெடுப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி காவற்துறை படையணி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை காவற்துறையின் 152 ஆவது நிறைவாண்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட மாட்டாது. கடந்த காலத்தில் காவற்துறையினர் பல்வேறு வெற்றிகளை அடைந்ததோடு பல பின்னடைவுகளையும் எதிர்நோக்கினார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த முடிந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

திகனயில் இடம்பெற்ற கலவரம் கவலைக்குரிய சம்பவமாகும். இதன்மூலம் அனைவரும் பாடங்களை கற்றுக்கொள்வது அவசியமாகும். காவற்துறையினருக்கு தேவையான சகல ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், காவற்துறை சேவை சார்ந்த பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பு பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டின் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தால் குறைவடைந்ததாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More