203
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தப் பகுதியில் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு 998 மில்லியன் ரூபா வரையில் முதலீடு செய்யப்படவுள்ளது. இதன்கீழ் தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ளது.
Spread the love