Home இலங்கைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் உணவில் விஷம் வைத்துக் கொல்ல நினைத்ததில்லை….

புலிகளின் தலைவர் பிரபாகரனின் உணவில் விஷம் வைத்துக் கொல்ல நினைத்ததில்லை….

by admin

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உணவில் விஷம் வைத்து அவரை கொலைச் செய்ய தாம்  ஒருபோதும் நினைத்ததில்லை என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புஞ்சி பொரளையிலுள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அவர்,  ‘ஜனபலய’ எதிர்ப்பு பேரணியில் கலந்துக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட பக்கற் பாலில் விஷம் கலக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம், நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இது தொடர்பில் காவற்துறையினர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, இச்சம்பவத்திற்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More