கொடிகாமம் காவற்துறையினருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் காவற்துறையினரின் ஆயுதங்கள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த வேளை, காவற்துறையினரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக காவற்துறையின குறிப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து பெருமளவு காவற்துறையினர் தென்மராட்சிப் பிரதேசத்துக்கு அழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, வாகனத்தை தேடும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.