குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி வட்டக்கச்சி, பன்னங்கண்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் பதிவாளர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். குறித்த பகுதியில் சட்டத்திற்கு முரணாக மண் ஏற்றிய சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று பதிவு செய்யப்பட்டது.
குறித்த வழக்கினை விசாரணைக்கு எடு்த்துக்கொண்ட மன்று அந்தப் பகுதியை நேரடியாக சென்று பார்வையிட்டு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.
இதனை அடுத்து குறித்த பகுதிக்கு இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதிவாளர் சிவபாளினி சண்முகராஜ் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் குழுவினர் நேரில் பார்வையிட்டனர். இதன்போது அந்தப்பகுதியில் வௌ;வேறு இடங்களில் சட்டவிரோதமாக அகளப்பட்டு குவிக்கப்பட்டிருந்த மண் ஏற்றும் பகுதிகள் கிளிநொச்சி நீதவான் நிதிமன்றினால் அடையாளமிடப்பட்டது.
குறித் பகுதியில் ஆங்காங்கே பெருந்தொகை மணல் திட்டுக்கள் உருவாக்கப்பட்டமை தொடர்பில் பார்வையிட்ட குறித்த குழுவினர் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையினை தாயாரித்துள்ளமை குறிப்பிடதக்கது.