குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் நாளைய(21-09-2018) விசேட அமர்வுக்கு ஊடகவியலாளர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். நாளை 21-09-2018 அன்று பிற்பகல் இரண்டு மணி முதல் ஜந்து மணி வரை கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சி சேவைச் சந்தையின் புதிய கட்டடம் தொடர்பாகவும், கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் உறுப்பினர்களுக்கான ஓதுக்கீடு பற்றியும் அராய்வதற்காக கரைச்சி பிரதேச சபையின் 13 உறுப்பினர்களின் ஒப்பம் இட்டு விசேட அமர்வை கூட்டுமாறு கோரியிருந்தமைக்கு அமைவாக நாளைய விசேட அமர்வு இடம்பெறுகிறது.
இந்த விசேட அமர்வில் கலந்துகொள்வதற்கே ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனத் தவிசாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இனி வரும் காலங்களில் சபையின் மாதாந்த கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ள ஊடகவியலாளர்கள் தங்களது ஊடக அடையாள அட்டையின் நிழல் பிரதியொன்றை முன் கூட்டியே வழங்கி அனுமதிபெறப்பட வேண்டும் என்றும் தவிசாளர் அ.வேழமாலிகிதனால் அறிவிக்கப்பட்டுள்ளது.