பெருந் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்த மாபெரும் மக்கள் போராட்டம் இன்று (23-09-2018) தலவாக்கலை நகரத்தில் ஊர்வலமாக ஆரம்பித்து நகர மைதானத்தில் கூட்டம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் எம். திலகராஜா, பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக எஸ்.ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ்.சதாசிவம், மக்கள் தொழிலாளர் சங்கம் சார்பாக சட்டதரனி இ. தம்பையா, பெருந்தோட்ட உழைப்புரிமை சங்கம் சார்பாக சு. விஜயகுமார், மலையக தொழிலாளர் முன்னணியின் சார்பில் அனுஷா சந்திரசேகரன், விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆர்.எம்.கிருஸ்ணசாமி, சிவில் சமூக அமைப்பு சார்பாக பிரீட்டோ சந்திரசேகரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ் ராஜரட்ணம், கொழும்பு வாழ் மலையக இளைஞர்கள் சார்பாக கிருஷாந்த், தேயிலை தேசம் சார்பாக யோகசாந்தினி, ஆகியோரும், தொழிலாளர் தேசிய சங்கம் சார்பில் தொழிற்சங்க ஆலோசகர் வீ.புத்திரசிகாமணி மற்றும் பிரதித் தலைவர் மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார் ஈரோஸ் ராஜேந்திரன் ஆகியோர் உiராயற்றியதுடன் மத்திய மாகாகண சபை உறுப்பினர்களான சரஸ்வதி சிவகுரு, ராஜாராம், ஸ்ரீதரன், ராம், மலையக மக்கள் முன்னணி செயலாளர் ஏ.லோரன்ஸ், தொழிலாளர் தேசிய சங்க பொது செயலாளர் எஸ்.பிலிப், மலையக தொழிலாளர் முன்னணி செயலாளர் கே.சுப்பிரமணியம் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல், தொழிற்சங்க, சிவில் சமூக அமைப்பினர், ஆசிரிய தொழிற்சங்கங்கள், வர்த்தகர்கள், அரசசார்பற்ற அமைப்புகள் தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டிருப்பதைக் காணலாம்.