166
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சுகவீனம் காரணமாக அடுக்கம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 45 நாட்களாக தொடர்ச்சியான அலைக்கழிப்பு, சுகாதாரமான உணவு வழங்கப்படாமை, பழைய கட்டிடத்தில் தனிமை சிறை என தொடர்ச்சியாக உரிமை மீறல்கள் நடைபெற்றதன் காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கைதான முதல் வாரத்திலிருந்து தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று திருமுருகன் காந்தி கூறி வருகிறார். மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என மயிலாடுதுறை, ஆலந்தூர், எழும்பூர் போன்ற நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நீதிபதிகள் தெரிவித்த பின்னரும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்லவில்லை.
இதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தொடர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதன் காரணமாக இன்று வேலூர் அருகே உள்ள அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
Spread the love