ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ஸக்கள் படுகொலை சூழ்ச்சி தொடர்பாகவும், பிரிதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா குறித்தும், குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைகளில் இருந்து நாளாந்தம் பல முக்கிய தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதன்படி தற்போது நாலக டி சில்வா கொமாண்டோ பயிற்சியளிக்க கோரியமை தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் பயங்கரவாத தடுப்புப் பிரவைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு கொமாண்டோ பயிற்சியளிக்குமாறு, அப்பிரிவின் பிரதிப் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா கேட்டுக்கொண்டதாக, விசேட அதிரடிப்படையின் அதிகாரியான எம்.ஆர்.லதிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின்போது வழங்கியுள்ள வாக்குமூலத்தில் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அனுமதியுடனே பிரதிக் காவற் துறைமா அதிபர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார் எனவும், விசேட அதிரடிப்படையின் அதிகாரியான எம்.ஆர்.லதிப் தெரிவித்துள்ளார்.