227
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தால் காணி அபகரிக்கப்படும் நிலமை தொடர்வதாகவும் பொதுமக்களு்ககுச் சொந்தமான 100 ஏக்கரை் நிலப் பகுதி அபகரிக்கப்பட்டு, எல்லையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் தமிழ் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தால் காணி அபகரிக்கப்படும் நிலமை தொடர்வதாகவும் பொதுமக்களு்ககுச் சொந்தமான 100 ஏக்கரை் நிலப் பகுதி அபகரிக்கப்பட்டு, எல்லையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, செம்மலை புளியமுனைப் பகுதியில் பொதுமக்களின் தோட்டக் காணிகள் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு கொக்குத்தொடுவாய் பிரதான வீதியின் மேற்குப் புறமாக உள்ள புளியமுனைப் பகுதியில் உள்ள 720 ஏக்கர் காணிகள் 1972ஆம் ஆண்டில் செம்மலையில் உள்ள பொதுமக்களுக்கு பபயிர்ச்செய்கை க்காக கிர்ந்தளிக்கப்பட்டது.
குறித்த காணிகளில் கச்சான், சோளம் முதலிய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போர்க் காலத்தில் அப் பகுதிகளுக்குச் சென்று பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் குறித்த பகுதியில் மக்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த காணிகளை வனவள திணைக்களத்திற்குச் சொந்தமானவை என்று தெரிவித்து, காணிகளை அபகரித்து பெயர்ப் பலகை இடப்பட்டுள்ளது. குறித்த காணிகளுக்குள் பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியாது என்றும் காணிகளுக்குள் நுழைந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த காணிகளை விடுவித்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போர் காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்தது என்றும் 2015இல் கரைத்துறைப் பற்று பிரதேச செயலகம் ஊடாக 350 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளில் 270 குடும்பங்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக தமது காணிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த ஆண்டும் பயிர்ச்செய்கையில் ஈடுபடவிருந்த நிலையிலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர். தொல்லியல் திணைக்களம் ஒரு புறத்தில் மக்களை துன்புறுத்த மறுபுறத்தில் வகவளத் திணைக்களம் துன்புறுத்துகின்றது.
குறித்த காணிகளுக்கான ஆவணங்கள் மக்களிடம் உள்ளதாகவும் அவர்கள் அங்கு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமைக்கான அடையாளங்கள் உள்ளதாகவும் கூறியுள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன், தமிழ் தலைவர்கள் இந்த மக்களின் காணிகளை பெற்றுக் கொடுப்பதில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love