ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இன்று பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் 29-வது தூதராக நிக்கி ஹாலே கடந்த 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
ஓபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்த காலக்கட்டத்தில் தெற்கு கரோலினா மாநிலத்தின் 116-வது ஆளுனராகவும் நிக்கி ஹாலே பதவி வகித்துள்ளார். இந்தநிலையில் இன்று அவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அவரது பதவிவிலகல் தொடர்பான முழுமையான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் நிக்கி ஹாலேவின் பதவிவிலகலை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்றுகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.