குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 87 ஏக்கர்களை, பொது மக்களின் காணிகள் பாவனைக்காக விடுவிக்க கடந்த புதன் கிழமை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந் நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை புதைகுழி பகுதியின் அருகில் அமைந்திருந்த இராணுவத்தின் வசம் காணப்பட்ட சுமார் 5 ஏக்கர் காணி பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலும் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி முருங்கன் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இரானுவ முகாம் காணப்பட்ட பொது மக்களின் 4 ஏக்கர் காணியும் இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரானுவ முகாம் கடந்த 2006ஆம் ஆண்டளவில் முருங்கன் பகுதியில் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 12 வருடங்கள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில், கடந்த புதன் கிழமை (17.10.18) முழுதாக அகற்றப்பட்டு மக்களுடைய பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
முருங்கன் பகுதியில் காணப்பட்ட இந்த இராணுவ முகாமை அகற்ற கோரி பல்வேறு தடவைகள் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மக்களால் முன் மொழிவுகள் முன்வைக்கப்படமையும் குறிப்பிடத்தக்கது.