இலங்கையின் அனைத்து மாகாணங்களினதும் ஆளுநர்கள் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். இதன் அடிப்படையில் தாமும் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக வடக்கு மாகாணத்தில் ஆளுநராக செயற்பட்டுவந்த, ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
ஆளுநர்கள் தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அறிவித்தலுக்கமைய, குறித்த பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனைத்து மாகாணங்களிற்குமான புதிய ஆளுநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு கடமைகளை பொறுப்பேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
1 comment
யாருக்கு எது பிடிக்கிறதோ இல்லையோ, நமது ஜனாதிபதி.
திரு. மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சர்கள் மற்றும்
அதிகாரிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்வதில் அலாதிப்
பிரியம் இருப்பது மட்டும் நன்றாகவே புரிகின்றது.
2015 ல் பதவிக்கு வந்த நமது ஜனாதிபதி, இதுவரையில் பதவிப்
பிரமாணம் செய்து வைத்த அமைச்சர்களின் எண்ணிக்கையைப்
போல் ஒரு தொகையை, பல தவணைகள் ஜனாதிபதி பதவி
வகித்தவர்கள் கூடச் செய்திருக்க மாட்டார்கள். காரணம், உலகில்
வேறெந்த நாடுகளிலும் இலங்கையைப் போன்று நூற்றுக் கணக்கில்
அமைச்சர்கள் நியமிக்கப்படுவதில்லையே!
இது கூட ஒரு புதுமையான நோய் போலும்?