152
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே மீண்டும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அமைச்சுக்களுக்குரிய நிறுவனங்களை பகிர்வது தொடர்பிலேயே இவ்வாறு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட புதிய அமைச்சுக்களுக்குரிய நிறுவனங்கள், விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் சில அமைச்சுக்களுக்கு குறைந்தளவு நிறுவனங்களே ஒதுக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர்கள் சிலர் தமது அதிருப்தி வெளியிட்டுள்ளனர். எனவே இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love