மாத்தறையிலிருந்து பெலியத்த வரை அமைக்கப்பட்டுள்ள புதிய புகையிரத பாதையில் இன்று முதன் முதலாக சென்ற புகையிரதத்தில் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டிருந்த போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பெலியத்த புகையிரத நிலையத்துக்கு சென்ற அமைச்சரிடம் இது மகிந்த ராஜபக்ஸவால் அமைக்கப்பட்ட புகையிரத பாதை எனத் தெரிவித்து மகிந்தவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஊடகங்களுக்கும் எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அங்கிருந்து சென்றுள்ளார்.
அத்துடன் குறித்த கண்காணிப்பு புகையிரதத்தில் மகிந்தவின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள், பதாதைகளையும் தொங்க விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.