மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்த சபாநாயகர்
ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
பாராளுமன்றம் இன்று பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
சபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் சார்பில் பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தரா? மகிந்தரா?
இவ் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்றைய அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்த இறுதித் தீர்மானம் சபாநாயகரினால் அறிவிக்கப்படவுள்ளதுடன், எதிர்க்கட்சிகளுக்கான நிதியொதுக்கீடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை சபாநாயகர் தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்த வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து ஆராய்வதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல்களில் சில மாற்றங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது மேலும் எதிர்க்கட்சிகளுக்கான நிதியொதுக்கீடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது