150
அதியன் ஆதிரை இயக்க, தினேஷ் – அனேகா, ரித்விகா நடிப்பில் உருவாகும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தில் கயல் ஆனந்தி, நாயகியாக நடிக்கின்றார். இந்த திரைப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு வேகமாக இடம்பெற்று வருவதாக படக் குழு தெரிவிக்கின்றது.
நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படம் தயராகி வருகின்றது. மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட திரைப்படங்களில் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அதியன் ஆதிரை என்ற இளம் இயக்குனர் இந்த படத்தை இயக்குகின்றார்.
அட்டத்தி தினேஷ் கதாநாயகனாகவும் கயல் ஆனந்தி கதாநாயகியாகவும் ஒப்பந்தமாகியுள்ள இப் படத்தில் அனேகா, ரித்விகா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படம் பற்றி அதியன் ஆதிரை கூறும்போது,
‘‘கதைப்படி, கதாநாயகன் தினேஷ், லாரி டிரைவர். அவர் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. படம், உலக அரசியல் பேசும். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, தென்மா இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.’’ என்றார்.
Spread the love