இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்டிக் பண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை உடனடி தடையை விதித்துள்ளது.
பெண்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தனர் எனும் குற்றச்சாட்டுகள தொடர்பிலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையி;ல் விசாரணைகள் முடிவடையும் வரை அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை , ஐசிசி, அல்லது மாநில அமைப்பொன்றின் போட்டிகள் அல்லது நிகழ்வுகளில் இருவரும் n கலந்துகொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவுஸ்திரேலிய தொடரில் கலந்துகொண்டுள்ள இருவரும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.