நோர்வேயில் பிறப்பு வீதம் குறைவாக இருப்பதனால் எதிர்வரும் காலத்தில் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் தேவை என அந்நாட்டு பிரதமர் எர்னா சொல்பெர்க் (Erna Solberg,) தெரிவித்துள்ளார். அண்மையில் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள ஒரு செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நமது நாட்டுக்கு இப்போதைய தேவை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள்தான். இதை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் காலத்தில், இதேபோல் நாடு இருந்தால் நாம் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுவாக நோர்வே, சுவீடன், டென்மார்க் , பின்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளில் குழந்தைகள் பிறப்பு வீதம் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது