குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை முழுவதும் உள்ள புகழ்பெற்ற மற்றும் வரலாற்று பழமை வாய்ந்த இந்து ஆலயங்கள் சில வற்றை புனித ஸ்தலங்களாக மாற்றுவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்திற்கு இன்று (23) புதன் கிழமை காலை சென்ற அமைச்சர் அங்கு இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
திருக்கேதிஸ்வர பகுதிக்கு சொந்தமான , இன்னும் வழங்கப்படாத காணிகள் அனைத்தையும் மக்களின் பாவனைக்கும் ஆலய பாவனைக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
குறித்த அமைச்சரவை பத்திரத்தினை சமர்பிக்கும் போது அனைவரும் அனைத்து பாரளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் மக்கள் பிரதி நிதிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.
தற்போது இந்தியாவின் நிதி உதவியுடன் நடை பெற்று வரும் அபிவிருத்தி மற்றும் கட்டுமான பணிகள் தொடர்பான விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் தேசிய அரச கரும மொழி அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.ரவீந்திரன் , இந்து விவகார அமைச்சின் பனிப்பாளர் உமா மகேஸ்வரன் , கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.