141
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில் ஏற்கனவே இருக்கின்ற உறுப்பினர்களையே எதிர்வரும் ஆண்டுக்கும் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்து வரும் ஆண்டுக்கான அந்த கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை நேற்றைய கூட்டத்தின் போது மேலும் சில பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்..
Spread the love