Prime Minister Lee Hsien Loong is on an official visit to Sri Lanka until January 24. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)
சிங்கப்பூருக்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெசியன் லோங் (Lee Hsien Loong) கிற்குமிடையிலான இன்று (25) நண்பகல் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக, சுற்றுலா மற்றும் தொழிற்துறை உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையே கைச்சாத்திடப்பட்டிருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அந்த ஒப்பந்தத்தை தயாரிக்கும்போது இலங்கை தரப்பில் ஒரு சில குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த குறைபாடுகளை சரி செய்யும் முகமாக ஒரு சில திருத்தங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆசிய வலயத்திற்கு மாத்திரமன்றி உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் சவாலை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன், போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக தலைமையின் கீழ் ,லங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி செயலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது