குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட உப புகையிரத நிலையம் இன்று (27.01.2019) மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.
கொழும்பில் இருந்து புறப்பட்ட இந்தியா அரசினால் வழங்கப்பட்ட உத்திரதேவி புகையிரத்தில் வருகை தந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அறிவியல் நகர் உப புகையிரத நிலையத்தை திறந்து வைத்தார்.
அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவை வட.மாகாண ஆளுநர் மற்றும் இந்திய துணைத் தூதுவர் ஆகியோர் வரவேற்றனர்.தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நினைவுக் கல்லினை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் பிரயாணச் சீட்டினையும் வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, வட.மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், யாழ். இந்தியத் துணைத் தூதுவர், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்