குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாணவர்கள் போதை பொருளை தடுக்க முயற்சிகளை முன்னெடுக்கின்றமையினரால் அவ்வாறான மாணவர்களை பாதுகாக்க காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
போதை பொருள் வியாபாரிகள் மாணவ சமூகத்தை அழிப்பதனை நோக்காக கொண்டே தொழிற்படுகின்றனர். மாணவர்கள் மத்தியில் போதை பொருள் பாவணையை ஊக்குவிக்கின்றார்கள்.
அந்த நிலையில் போதை பொருளை ஒழிப்பதற்கு மாணவ சமூகம் மற்றும் இளையோர் முன்வந்து அதற்கு எதிராக செயற்படுகின்றனர்.
அவ்வாறு கிளிநொச்சியில் போதை பொருள் வியாபாரிகள் பற்றிய தகவல் வழங்கிய மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் முறையிட்ட போது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய நிலையிலையே மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.
போதை பொருளுக்கு எதிராக செயற்படுவோர்களை, போதை பொருள் வியாபாரங்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களை பாதுகாக்க பொலிஸார் தவறும் பட்சத்தில் போதை பொருளை ஒழிக்க முடியாது.
எனவே மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாகவே போதை பொருள் பற்றிய தகவல்கள் வழங்குவோர் தாமாக முன்வந்து தகவல்களை வழங்குவார்கள் அதற்கு காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.