அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் டேவிட் சாகர் பதவிவிலகியுள்ளார். டேவிட் சாகர் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்து வந்து வந்துள்ளார். இவரது பதவிவலகலை உறுதிப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் டிராய் கூலேயை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.
டிராய் கூலே இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவும், அவுஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான விக்டோரியா அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். அவுஸ்திரேலிய அணியானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளநிலையில் இதன்போது டிராய் கூலே பயிற்சியாளராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது